அதிரடி ஆட்டம்.. எப்படி போட்டாலும் அடி.. மும்பையை கதிகலங்க வைத்த டெல்லி இளம் வீரர்!

Jake Fraser McGurk

IPL2024: மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் இளம் வீரர் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தல்.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் மற்றும் அபிஷேக் போரல் களமிறங்கி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் குறிப்பாக 22 வயது இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். ஜஸ்பிரித் பும்ராவின் முதல் ஓவரிலேயே 18 ரன்களை அடித்து மும்பையை கதிகலங்க வைத்தார்.

பும்ரா மட்டுமின்றி மும்பை பந்துவீச்சாளர்கள் ஹர்திக் பாண்டியா உட்பட யாரு போட்டாலும், எப்படி போட்டாலும் நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்டார். இதனால் மும்பை அணி சற்று மிரண்டு போனது. அதிரடியாக விளையாடிய ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் அதிவேகமாக 15 பந்துகளிலேயே தனது அரசை சதத்தை அடித்தார்.

ஏற்கனவே ஐதராபாத்துக்கு எதிராக 15 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், இன்று மீண்டும் குறைந்த பந்துகளில் அதுவும் மும்பைக்கு எதிரான போட்டியில் அடித்து அசத்தியுள்ளார். இறுதியாக 27 பந்துகளில் 84 (11 பவுண்டரிஸ், 6 சிக்ஸர்ஸ்) ரன்கள் எடுத்திருந்த நிலையில், 8வது ஓவரில் சாவ்லா பந்துவீச்சில் நபியிடம் கேட்ச் கொடுத்து ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் தனது விக்கெட்டை இழந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்