ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக 164 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பமே விக்கெட்களை இழந்து தடுமாறி கொண்டே விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் 2, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 7 இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அவர்களுக்கு பிறகு வந்த அபிஷேக் போரல் 7, அக்சர் படேல் 15 ஆகியோரும் விரிவாகவே ஆட்டமிழந்தார்கள். இதன் காரணமாக ஒரு 8.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் மட்டுமே டெல்லி எடுத்திருந்தது.
எனவே, போட்டியில் பெங்களூர் அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு என்பது அப்போதே பாதி % உறுதியாகிவிட்டது. அப்போது தான் பெங்களூர் ஆசையில் அதிர்ச்சியை தூக்கிப்போடும் விதமாக கே.எல்.ராகுல் நிதானம் கலந்த அதிரடியுடன் ஆடி அரைசதம் விளாசி டெல்லி அணியை தனது தோளில் தூக்கிவைத்து கொண்டு வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
அவருடன் மற்றொரு முனையில் நின்று கொண்டிருந்த ஸ்டெப்ஸ் சிங்கிள் நடுவில் பவுண்டரி என விளாசி பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொண்டு விளையாடினார். பெங்களூர் பக்கம் இருந்த போட்டியை கே.எல் .ராகுல் டெல்லி பக்கம் கொண்டு வந்து ஒரு கட்டத்தில் 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலமைக்கு கொண்டு வந்தார். இறுதியாக 17.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றிபெற்றது.
களத்தில் கே.எல். ராகுல் 93* டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38*பெங்களூர் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
மேலும், ஏற்கனவே, இந்த தொடரில் 3 போட்டிகள் டெல்லி அணி விளையாடியிருந்த நிலையில், அந்த 3 போட்டியிலும் வெற்றிபெற்றிருந்தது. இன்று பெங்களூருக்கு எதிராக தங்களுடைய 4-வது போட்டியில் டெல்லி விளையாடிய நிலையில், இந்த போட்டியிலும் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் முதல் இடத்திற்கும் டெல்லி முன்னேறியுள்ளது.