IPL2024: லக்னோ அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் டெல்லி அணியும், லக்னோ அணியும் டெல்லி உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டைகளை இழந்து 208 ரன்கள் எடுத்தனர்.
இதில் அதிகபட்சமாக அபிஷேக் போரல் 58 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 57 ரன்களும், ஷாய் ஹோப் 38 ரன்களும், ரிஷப் பந்த் 33 ரன்களும் எடுத்தனர். 209 ரன்கள் இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். இன்றைய போட்டியில் தொடக்கமே லக்னோ அணிக்கு சிறப்பாக அமையவில்லை.
காரணம் முதல் ஓவரின் 5-வது பந்தில் கேப்டன் கே.எல் ராகுல் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அடுத்து மார்கஸ் ஸ்டோனிஸ் களமிறங்க மற்றொரு தொடக்க வீரரான குயின்டன் டி காக் 3-வது ஓவரில் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.இதைத்தொடர்ந்து தீபக் ஹூடா களமிறங்க 4-வது ஓவரின் முதல் பந்தில் மார்கஸ் ஸ்டோனிஸ் 5 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்த ஓவரிலே தீபக் ஹூடா டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் லக்னோ அணி 5 ஓவரில் 44 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் வந்த ஆயுஷ் படோனி நிலைத்து நிற்பார் என எதிர்பார்த்த நிலையில் வெறும் 6 ரன்களை எடுத்து நடையை கட்டினார். இருப்பினும் லக்னோ அணியில் மத்தியில் களம் இறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 27 பந்தில் 4 சிக்ஸர், 6 பவுண்டர் என மொத்தம் 61 ரன்கள் குவித்தார்.
அடுத்து இறங்கிய அர்ஷத் கான் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசி 58* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக லக்னோ அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டையும், அக்சர் படேல், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கலீல் அகமது தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
டெல்லி அணி இதுவரை 14 போட்டிகளில் விளையாடி தலா 7 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. அதே நேரத்தில் லக்னோ அணி 13 போட்டிகள் விளையாடி 6 போட்டியில் வெற்றியும், 7 போட்டியில் தோல்வியும் அடைந்து 12 புள்ளிகளுடன் உள்ளது. லக்னோ அணிக்கு மீதம் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. லக்னோ அணி அந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் வெறும் இரண்டு புள்ளிகள் மட்டுமே பெற முடியும்.
ஏற்கனவே 14 புள்ளிகளுடன் சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளனர். இதனால் லக்னோ பிளே ஆப் செல்வதில் சற்று சிரமம் இதனால் தற்போது இரு அணிகளுமே பிளே ஆப் செல்லும் தகுதியை இழந்துள்ளனர்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…