டெல்லி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. புள்ளி பட்டியலில் முதலிடம்..!

இன்றைய 16-வது போட்டியில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இப்போட்டி, ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய ஷிகர் தவான் 26 ரன்னில் வெளியேறினர். பின்னர், ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க பிருத்வி ஷா , ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய பிருத்வி ஷா அரைசதம் விளாசி 66 ரன்கள் குவித்தார்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 88 * ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றனர். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 228 ரன்கள் குவித்தனர்.
229 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே சுனில் நரைன் 3 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், நிதீஷ் ராணா களமிறங்க நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 28 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதைத்தொடர்ந்து, இறங்கிய ரஸ்ஸல் 13 ,
தினேஷ் கார்த்திக் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் சென்றனர். மத்தியில் களம் கண்ட மோர்கன் 44 , ராகுல் திரிபாதி 36 ரன்கள் குவித்தனர். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 210 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் டெல்லி அணி முதலிடத்தில் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024