சொந்த மண்ணில் பெங்களூரு அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெல்லி
2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 46-வது ஐபில் போட்டியில் டெல்லி அணியும் -பெங்களூரு அணியும் மோதினர்.இந்த போட்டியானது டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக ஷிகார் தவான், ப்ரித்வி ஷா களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே 18 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி கேப்டன் ஷ்ரியாஸ் ஐயரும்,ஷிகார் தவான் கூட்டணியில் அணியின் ரன்னை உயர்த்தினார்கள்.
டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷ்ரியாஸ் ஐயர் 52 ரன்களும், ஷிகார் தவான் 52 ரன்களும் குவித்தனர்.இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
ஆட்டம் இழக்காமல் ஷெர்ஃபேன் ரூதர்போர்ட் 28*ரன்களும் , ஆக்ஸார் படேல் 16* ரன்களுடன் களத்தில் நின்றனர்.
பெங்களூரு அணி பந்து வீச்சில் யூசுவெந்திர சஹால் 2 விக்கெட்டையும், உமேஷ் யாதவ்,வாஷிங்டன் சுந்தர், நவடிப் சைனி ஆகியோர் தலா1 விக்கெட்டையும் வீழ்த்தினார். பெங்களூரு அணி 188 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.
முதலில் பார்திவ் படேல் , விராட் கோலி இறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய பார்திவ் படேல் 39 ரன்னில் விக்கெட்டை இழந்தார். வழக்கம் போல பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி குறைந்த ரன் ஆனா 23 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் அடுத்தடுத்து இறங்கிய ஏபி டி வில்லியர்ஸ் 17 ரன்னிலும், ஹென்ரிக் கிளாசென் 3 ரன்னிலும் , ஷிம்ம் டூப் 24 ரன்னிலும், குர்கீரத் சிங் மேன் 27 ரன்னிலும் ,வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னிலும் அவுட் ஆனார்.
இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 171ரன்கள் எடுத்து. டெல்லி அணியிடம் 16 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.