#DCvRCB: இரண்டாம் இடத்தை பிடிக்கப்போவது யார்?? கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Default Image

ஐபிஎல் தொடரில் 55 ஆம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது.

ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் 55 ஆம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதவுள்ளது. இந்த போட்டி, அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இவ்விரு அணிகளும் பிளே-ஆப்ஸ் சுற்றுக்குள் செல்ல இது முக்கியமான போட்டியாகும்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், 14 புள்ளிகளுடன் இந்த இரண்டு அணிகளும் எல்லையில் உள்ளது. இந்த போட்டி மூலமாக, பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு செல்ல இவ்விரண்டு அணிகளும் போராடி வருகிறது. அந்தவகையில் இந்த போட்டி, முக்கியமானதாக கருதப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்