சூப்பர் ஓவரில் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி….!

Published by
murugan

சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி ஒரு ஓவரில் 7 ரன்கள் எடுத்தனர்.  பின்னர் இறங்கிய டெல்லி அணி 8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் டெல்லி -ஹைதராபாத் அணி மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை பறிகொடுத்து 159 ரன்கள் எடுத்தனர்.

160 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர். ஆனால் தொடக்கத்திலே  டேவிட் வார்னர் 6 ரன்னில் ரன் அவுட்டானார். இதைத்தொடர்ந்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். ஜானி பேர்ஸ்டோவ் உடன் கூட்டணி அமைத்த வில்லியம்சன் சிறப்பாக விளையாடினார்.

நிதானமாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 38 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்து இறங்கிய விராட் 4, கேதாா் ஜாதவ் 9, அபிஷேக் சா்மா 5, மற்றும் ரஷித் கான் ரன் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் அரைசதம் விளாசி 66* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். கடைசியில் இறங்கிய ஜகதீஷா சுசித் 14* ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார்.

இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் எடுத்தனர். இதன் காரணமாக போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி ஒரு ஓவரில் 7 ரன்கள் எடுத்தனர்.  பின்னர் இறங்கிய டெல்லி அணி 8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஐந்து போட்டிகளில் விளையாடிய ஹைதராபாத் அணி ஒரு போட்டியில் வெற்றியும், 4 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. ஐந்து போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி 4 போட்டியில் வெற்றியும்,1 போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது.

Published by
murugan

Recent Posts

காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!

காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!

சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…

29 minutes ago

AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று விளையாடும் போட்டியில் ஆஸ்ரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு…

2 hours ago

அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!

டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக்கொண்டார்.…

3 hours ago

காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

4 hours ago

நாதகவில் அடுத்த விக்கெட்டா? “நானே விரைவில் சொல்வேன்” – காளியம்மாள் விளக்கம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் (நாதக) சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

4 hours ago

ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்…

6 hours ago