சூப்பர் ஓவரில் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி….!

சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி ஒரு ஓவரில் 7 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய டெல்லி அணி 8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் டெல்லி -ஹைதராபாத் அணி மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை பறிகொடுத்து 159 ரன்கள் எடுத்தனர்.
160 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர். ஆனால் தொடக்கத்திலே டேவிட் வார்னர் 6 ரன்னில் ரன் அவுட்டானார். இதைத்தொடர்ந்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். ஜானி பேர்ஸ்டோவ் உடன் கூட்டணி அமைத்த வில்லியம்சன் சிறப்பாக விளையாடினார்.
நிதானமாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 38 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்து இறங்கிய விராட் 4, கேதாா் ஜாதவ் 9, அபிஷேக் சா்மா 5, மற்றும் ரஷித் கான் ரன் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் அரைசதம் விளாசி 66* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். கடைசியில் இறங்கிய ஜகதீஷா சுசித் 14* ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார்.
இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் எடுத்தனர். இதன் காரணமாக போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி ஒரு ஓவரில் 7 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய டெல்லி அணி 8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐந்து போட்டிகளில் விளையாடிய ஹைதராபாத் அணி ஒரு போட்டியில் வெற்றியும், 4 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. ஐந்து போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி 4 போட்டியில் வெற்றியும்,1 போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025