ஐபிஎல் டி20 தொடரின் 2-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே தவான் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். இதையடுத்து, பிருத்வி ஷா 5 ரன்னில் வெளியேற பின்னர், இறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விலையாடி 53 ரன்கள் குவித்தார்.
இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 157 ரன்கள் எடுத்தனர். 158 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த ராகுல் 21 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் இறங்கிய கருண் நாயர், நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், பஞ்சாப் அணி மோசமான நிலையில் இருந்தது. அப்போது, தொடக்க வீரராக களம் இறங்கிய மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து 89 ரன்கள் குவித்தார்.
இறுதியாக பஞ்சாப் அணி 8 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடைபெற்றது. சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டை இழந்து 2 ரன்கள் எடுத்தது. பின்னர் இறங்கிய டெல்லி அணி 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை : பிரபல ரவுடி தூத்துக்குடியைச் சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். சென்னை கிண்டியில் பதுங்கியிருந்த…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 22) தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு…
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…