டெல்லி அணி 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி..!

Published by
murugan

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி, ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா, தவான் களமிறங்கினர். இவர்களின் கூட்டணியில் அணியில் ஸ்கொர் உயருமென ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 5 ரன்களில் தவான் வெளியேறினார். அவரைதொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க, அடுத்த சில நிமிடங்களில் 11 ரன்களில் ப்ரித்வி ஷா விக்கெட்டை இழந்தார்.

22 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேற, 5 ரன்கள் மட்டுமே அடித்து ரிஷப் பந்த் வெளியேறினார். அதன்பின் ஸ்டோய்னிஸ்- ஹெட்மேயர் கூட்டணியில் டெல்லி அணியில் ரன்கள் உயர்ந்தது. நிதானமாக விளையாடிய ஸ்டோய்னிஸ் வெளியேற, அவரையடுத்து 45 ரன்கள் எடுத்து ஹெட்மேயர் தனது விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக 20 ஓவர் முடிவில் டெல்லி அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் அடித்தது. 185 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்,  பட்லர் களமிறங்க ஆட்டம் தொடக்கத்திலே பட்லர் 13 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் நிதானமாக விளையாடி 24 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர், இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற,மத்தியில் களம் கண்ட ராகுல் டிவாட்டியா சிறப்பாக விளையாடி 38 ரன்கள் குவித்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் அனைத்து  விக்கெட்டை இழந்து 138 ரன்கள் எடுத்து 46 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதனால், புள்ளி பட்டியலில் டெல்லி அணி 10 புள்ளி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

Published by
murugan
Tags: IPL2020RRvDC

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

3 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

4 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

5 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

5 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

6 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

8 hours ago