டெல்லி அணி 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி..!

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி, ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா, தவான் களமிறங்கினர். இவர்களின் கூட்டணியில் அணியில் ஸ்கொர் உயருமென ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 5 ரன்களில் தவான் வெளியேறினார். அவரைதொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க, அடுத்த சில நிமிடங்களில் 11 ரன்களில் ப்ரித்வி ஷா விக்கெட்டை இழந்தார்.
22 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேற, 5 ரன்கள் மட்டுமே அடித்து ரிஷப் பந்த் வெளியேறினார். அதன்பின் ஸ்டோய்னிஸ்- ஹெட்மேயர் கூட்டணியில் டெல்லி அணியில் ரன்கள் உயர்ந்தது. நிதானமாக விளையாடிய ஸ்டோய்னிஸ் வெளியேற, அவரையடுத்து 45 ரன்கள் எடுத்து ஹெட்மேயர் தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக 20 ஓவர் முடிவில் டெல்லி அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் அடித்தது. 185 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் களமிறங்க ஆட்டம் தொடக்கத்திலே பட்லர் 13 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் நிதானமாக விளையாடி 24 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர், இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற,மத்தியில் களம் கண்ட ராகுல் டிவாட்டியா சிறப்பாக விளையாடி 38 ரன்கள் குவித்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 138 ரன்கள் எடுத்து 46 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதனால், புள்ளி பட்டியலில் டெல்லி அணி 10 புள்ளி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.