SRHvsDC : அந்நியனாக மாறிய அனிகேத்..அதிரடி ஹைதராபாத்தை திணற வைத்த டெல்லி! டார்கெட் இது தான்!
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு செய்தார். எப்போதும் அதிரடியாக தொடக்கத்தை ஆரம்பிக்கும் ஹைதராபாத் இந்த முறை அதிரடி காட்ட தவறியது என்று தான் சொல்லவேண்டும். விசாகப்பட்டினம் மைதானம் என்பதால் கண்டிப்பாக சிக்ஸர் மழை பொழிய போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நடந்ததே வேற தொடர்ச்சியாக அணிக்கு விக்கெட் தான் விழுந்தது.
அதிரடி அணி ஹைதராபாத்தையும் எங்களால் தடுக்க முடியும் என்கிற வகையில் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் கலக்கி இருக்கிறார்கள் என்று சொல்லலாம். முதல் ஓவரின் 5-வது பந்தில் அபிஷேக் சர்மா ரன் அவுட் ஆகி தன்னுடைய விக்கெட்டை இழந்தார். அது தான் முதல் விக்கெட். அந்த விக்கெட்டை தொடர்ந்தாவது ஹைதராபாத் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்த்தால் அதன்பிறகும் சொதப்ப தொடங்கியது.
அபிஷேக் சர்மா அவுட் ஆன பிறகு 2.1 ஓவரில் இஷான் கிஷன் 2 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து அடுத்ததாக களமிறங்கிய நிதீஷ் குமார் ரெட்டி, பொறுமையாக கூட விளையாடாமல் அதிரடி காட்ட நினைத்து 2.3 ஓவரில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இவர்களை தொடர்ந்து அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் ஹெட் மேல் இருந்த சூழலில் அவரையும் டெல்லி பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 4.1 ஓவரில் 22ரன் களில் அட்டமிழந்து வெளியேற்றினார்.
இதன் காரணமாக, ஒரு கட்டத்தில் அணி தடுமாறி கொண்டிருந்த நிலையில், அனிகேத் வர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் நல்ல பார்ட்னர் ஷிப் அமைத்துக்கொண்டு விளையாடினார்கள். இவர்களுடைய ஆட்டத்தின் காரணமாக தான் திணறிக்கொண்டிருந்த ஹைதராபாத் ஒரு டீசண்டான நிலைமைக்கு வந்தது. நிதானம் கலந்த அதிரடியுடன் இருவரும் விளையாடி வந்த சூழலில், 10.5 ஓவரில் ஹென்ரிச் கிளாசென் தனது விக்கெட்டை இழந்து 32 ரன்களுக்கு வெளியேறினார்.
அவர் வெளியேறிய பிறகு களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்களும் கொஞ்சம் கூட பொறுமையாக விளையாடவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், அபினவ் மனோகர் 4, பாட் கம்மின்ஸ் 2, இருவரும் வெளியேறினார்கள். இருப்பினும் அனிகேத் வர்மா ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி கொண்டு இருந்தார். இதனால் தான் 14 ஓவர்களில் அணி 148 ரன்களை எட்டியது. பிறகு கடைசி நேரத்தில் 15.5 ஓவரில் 74 ரன்களுக்கு அனிகேத் வர்மாவும் ஆட்டமிழந்த காரணத்தால் அணி திணறியது.
இறுதியாக 18.4 ஓவர்களில் ஹைதராபாத் அணி தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்து. ஆரம்பத்தில் 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அளவுக்கு குறைவான ரன்களில் ஆட்டமிழக்க காரணமே மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சு தான். ஏனென்றால், இந்த போட்டியில் மட்டும் அவர் 5 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார். ஹைதராபாத் 163 ரன்கள் எடுத்துள்ள நிலையில், 165 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கவுள்ளது.