சென்னை அணிக்கு 176 ரன்கள் நிர்ணயித்த டெல்லி..!

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரில் 7 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச தேர்வு செய்தார்.
டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, தவான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து நிதானமாக விளையாடி வந்த பிருத்வி ஷா அரைசதம் விளாசினார். இதையடுத்து, தவான் 35 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் அடுத்த சில நிமிடங்களில் பிருத்வி ஷா 64 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்னுடன் வெளியேற அதிரடியாக விளையாடி வந்த ரிஷாப் பண்ட் 37 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டை பறித்தார். 176 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025