PBKSvDC இன்று பஞ்சாப் , டெல்லி அணிகளுக்கு இடையே 2-வது போட்டி சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டத்தை விளையாடத் தொடங்கினார்.
அதன்படி 12 பந்தில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி என மொத்தம் 20 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய வந்த டேவிட் வார்னர் 29 ரன்னில் ஹர்ஷல் படேல் ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து ஷாய் ஹோப் மற்றும் 14 மாதங்களுக்குப் பிறகு ரிஷப் பந்த் களத்தில் இறங்கினார். இருப்பினும் நிதானமாக விளையாடி வந்த ரிஷப் பந்த் அதிக ரன்கள் எடுக்காமல் 18 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
மத்தியில் இறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 , ரிக்கி பூய் 3 , சுமித் குமார் 2 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆனால் டெல்லி அணியில் சிறப்பாக விளையாடி ஷாய் ஹோப் 33 ரன்களும் , அபிஷேக் போரல் 32* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
இறுதியாக டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டையும், ரபாடா, ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…