டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை பறிகொடுத்து 159 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் டெல்லி -ஹைதராபாத் அணி மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர். டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக தவான், பிருத்வி ஷா இருவரும் இறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்திலேயே சிறப்பான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தி வந்தனர். நிதானமாக விளையாடி வந்த தவான் 28 ரன்னில் ரஷீத் கானிடம் போல்ட் ஆனார். இவர்கள் கூட்டணியில் 81 ரன்கள் எடுக்கப்பட்டது. பின்னர் கேப்டன் ரிஷாப் பண்ட் களமிறங்கினார்.
பண்ட் களமிறங்கிய சிறிது நேரத்திலேயே அரைசதம் விளாசிய பிருத்வி ஷா 53 ரன்னில் அவுட் ஆனார். பிருத்வி ஷா 7 பவுண்டரி ,ஒரு சிக்சர் விளாசினார். இதைத் தொடர்ந்து ஸ்மித் களமிறங்க ரிஷாப் பண்ட், ஸ்மித் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கை உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடி வந்த ரிஷாப் பண்ட் 37 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து களம் கண்ட ஹெட்மியர் ஒரு ரன்னில் வெளியேற இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை பறிகொடுத்து 159ரன்கள் எடுத்தனர். 160 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்க உள்ளது. ஸ்மித் கடைசிவரை களத்தில் 34* ரன் எடுத்து நின்றார்.
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…