இன்றைய 30-வது போட்டியில் டெல்லி vs ராஜஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.
டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பிருத்வி ஷா டக் அவுட் ஆனார். இவரைத்தொடர்ந்து, இறங்கிய ரஹானே 2 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர், களம் கண்ட ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான் உடன் சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்ந்தினர்.
சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 53, ஷிகர் தவான் 57 ரன்னில் விக்கெட்டை இழக்க பிறகு இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை, இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணி 162 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் இருவரும் இறங்கினர்.
நிதானமாக விளையாடி வந்த பட்லர் 22 ரன்னில் விக்கெட்டை இழக்க இறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 1 ரன் எடுத்து வெளியேறினார். தொடக்க வீரர் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்காமல் 41 ரன் எடுத்து பெவிலியன் சென்றார்.
பின்னர், மத்தியில் களம் கண்ட சஞ்சு சாம்சன் 25, ராபின் உத்தப்பா 32 ரன் எடுக்க அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 148 ரன் எடுத்து 13 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றதால் புள்ளி பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…