SRHvDC : அதிரடி அணிக்கே அல்வா கொடுத்த ஸ்டார்க்..4 விக்கெட் இழந்து ஹைதராபாத் திணறல்!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழந்து திணறி வருகிறது.

விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்றவுடன் ஹைதராபாத் அணி வழக்கம் போலவே அதிரடி தான் காண்பிக்கப்போகிறோம் என்பது போல பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டி நடைபெறுவது விசாகப்பட்டினம் மைதானம் என்பதால் கண்டிப்பாக சிக்ஸர் மழை பொழிய போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அப்படி எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அதிரடி அணி ஹைதராபாத்தையும் எங்களால் தடுக்க முடியும் என்கிற வகையில் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் கலக்கி இருக்கிறார்கள். முதல் ஓவரின் 5-வது பந்தில் அபிஷேக் சர்மா ரன் அவுட் ஆகி தன்னுடைய விக்கெட்டை இழந்தார். அது தான் முதல் விக்கெட். அந்த விக்கெட்டை தொடர்ந்தாவது ஹைதராபாத் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்த்தால் அதன்பிறகும் சொதப்ப தொடங்கியது.
அபிஷேக் சர்மா அவுட் ஆன பிறகு 2.1 ஓவரில் இஷான் கிஷன் 2 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து அடுத்ததாக களமிறங்கிய நிதீஷ் குமார் ரெட்டி, பொறுமையாக கூட விளையாடாமல் அதிரடி காட்ட நினைத்து 2.3 ஓவரில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இவர்களை தொடர்ந்து அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் ஹெட் மேல் இருந்த சூழலில் அவரையும் டெல்லி பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 4.1 ஓவரில் 22ரன் களில் அட்டமிழந்து வெளியேற்றினார்.
விரைவாக அதிரடி அணியை சிரித்தது யார் என்றால் மிட்செல் ஸ்டார்க் என்று தான் சொல்லியாகவேண்டும் ஏனென்றால், 3 ஓவர்கள் பந்துவீசிய அவர் மொத்தமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் பவர்பிளே முடிவிற்குள் 4 விக்கெட் இழந்து ஹைதராபாத் அணி திணறி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
வக்பு வாரிய சட்டத்திருத்தம் : ” ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?” தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!
April 3, 2025