இமாலய இலக்கை எட்டி இறுதியில் மாஸ் காட்டிய டெல்லி… 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.!
ஐபிஎல் 2025-ன் 4-வது போட்டியில் டெல்லி அணி, லக்னோ அணியை 1 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2025 இன் நான்காவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையே நடைபெற்றது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரனின் அதிரடியான ஆட்டத்தால், லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது.
டெல்லி அணி வெற்றி பெற 210 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது லக்னோ அணி. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் மார்ஷ்(72), பூரன்(75) ஆகியோர் அதிரடி காட்டினர். டெல்லி அணி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர், கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி சார்பில், முதல் ஓவரிலேயே ஜாக் ஃப்ரேசர் மகார்க் மற்றும் அபிஷேக் போரெல் ஆகியோரை ஷர்துல் தாக்கூர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் அஷுதோஸ் சர்மா, நிகம் அதிரடியில் டெல்லி அணி இலக்கை எட்டிப் பிடித்தது.
ரவி பிஷ்னோய் பந்தின் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் (2 ரன்கள்) கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். விபராஜ் நிகம் (39 ரன்கள்) திக்வேஷ் ரதியின் பந்து வீச்சில் எம். சித்தார்த்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (34 ரன்கள்) எம். சித்தார்த் பந்துவீச்சில் போல்டானார்.
இதற்கு முன்பு, ஸ்டப்ஸ் தனது ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்களை அடித்திருந்தார். சித்தார்த் சமீர் ரிஸ்வியையும் (4 ரன்கள்) வெளியேற்றினார். பின்னர் ஃபாஃப் டு பிளெசிஸ் 29(18) ரன்களுக்கு அவுட்டானார், ஏழாவது ஓவரில் 65/5 என்ற நிலையில் அவரது அணி தடுமாறியது.
பின்னர், அசுதோஷ் சர்மா மற்றும் விப்ராஜ் நிகாம் 22 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து டெல்லி அணியை காப்பாற்றினர். கேப்டன் அக்சர் படேல் (22 ரன்கள்) அவுட்டாகாமல் இருந்தனர். இறுதிவரை நிலைத்து நின்று ஆடிய அஷுதோஷ் சர்மா 66 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுக்க செய்தார். டெல்லி அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியில் டெல்லி அணி 19.3 ஓவரில் 9 விக்கெட்டை இழந்தபோதும் 211 ரன்கள் அடித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.