Rishabh Pant talks about defeat against Mumbai [image source: ipl/jio cinema]
ஐபிஎல்2024: பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தின் நிலைமையை புரிந்து கொண்டு பந்துவீச வேண்டும் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
17ஆவது சீசன் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் அடித்து தோல்வி அடைந்தது.
இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றியை பதிவு செய்தது. எனவே, மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்ததால் டெல்லி அணி புள்ளி பட்டியலில் 10ஆவது இடத்துக்கு சென்றுள்ளது. டெல்லி அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றி, 4 தோல்வி என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் தோல்வி குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர்களிடம் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இந்த போட்டியில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறும் வாய்ப்பில் தான் இருந்தோம். ஆனால், எங்களுடைய பேட்டிங்கில் பவர்பிளேயில் போதுமான ரன்களை சேர்க்கவில்லை.
குறிப்பாக பெரிய ஸ்கோரை நோக்கி களமிறங்கும்போது பவர் பிளேவில் ரன் அடிப்பது அவசியம். அது எங்கள் பேட்டிங்கில் நடக்கவில்லை. அதில் தான் எங்கள் வாய்ப்பை தவறவிட்டோம். இருப்பினும், அடுத்த சில ஓவர்களில் நாங்கள் நன்றாக பேட் செய்தோம். இதுபோன்று பெரிய இலக்கு இருக்கும்போது ஒவ்வொரு ஓவரிலும் 15 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் வரும். அது நிச்சயம் நெருக்கடியை கொடும், சுலபமாக அடிக்க முடியாது என்றார்.
மேலும் பவுலிங் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய ரிஷப் பண்ட், ஆம் எங்களிடம் சில மோசமான ஓவர்கள் இருந்தது. நாங்கள் பந்து வீச்சில் சில ஓவர்கள் சொதப்பி விட்டோம். ஆனால் அது சில நேரங்களில் அப்படித்தான் நடக்கும். இருப்பினும், இது அனைத்து போட்டிகளிலுமே தொடர்கதையாக இருப்பது தான் வேதனையாக இருக்கிறது.
பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்குள் பந்துவீச வேண்டும் மற்றும் மெதுவாக பிட்சிக்கு ஏற்றவாறு மாறுபட்ட வகையில் பந்துவீசுவது மிகவும் முக்கியம் ஆகும். நாங்கள் அதை செய்யவே இல்லை. பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தின் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு பந்துவீச வேண்டும். எங்களது டெத் ஓவர் மற்றும் பேட்டிங் என இரண்டும் மேம்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…
சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…