LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!
லக்னோ அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாட உள்ளன.
லக்னோ – டெல்லி அணிகள் மோதிய முதல் போட்டியில் டெல்லி அணி லக்னோவை டெல்லி மைதானத்தில் வைத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டியில் லக்னோ அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாட உள்ளது. அதேபோல 2ஆம் இடத்தில் உள்ள டெல்லி அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் முனைப்பில் உள்ளதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் :
ரிஷப் பண்ட் தலைமையிலான அணியில் ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத், டேவிட் மில்லர், ஷர்துல் தாக்கூர், திக்வேஷ் சிங் ரதி, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், பிரின்ஸ் யாதவ் ஆகியோர் விளையாட உள்ளனர்.
டெல்லி கேபிட்டல்ஸ் :
அக்சர் படேல் தலைமையிலான அணியில் அபிஷேக் போரல், கருண் நாயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், துஷ்மந்த சமீரா, முகேஷ் குமார் ஆகியோர் விளையாட உள்ளனர்.