#IPL2022: வெளுத்து வாங்கிய அக்ஸர் படேல்.. மும்பையை வீழ்ந்து டெல்லி அணி அபார வெற்றி!
15-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாம் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி, 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. இதில் அதிகபட்சமாக இஷாந்த் கிஷன் 81 ரன்களும், ரோஹித் சர்மா 41 ரன்கள் அடித்து அசத்தினார்கள்.
178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா – டிம் செய்பெர்ட் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே இந்த கூட்டணி சிறப்பாக ஆடிவந்ததை தொடர்ந்து, முருகன் அஸ்வின் வீசிய பந்தில் டிம் செய்பெர்ட் ஸ்டம்ப் அவுட் ஆனார்.
அவரையடுத்து களமிறங்கிய மந்தீப் சிங் டக் டவுட் ஆக, பின்னர் களமிறங்கிய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட ஒரு ரன் மட்டுமே அடித்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய லலித் யாதவ், ப்ரித்வி ஷா-வுடன் இணைய, அதிரடியாக ஆடிவந்த ப்ரித்வி ஷா 38 ரன்கள் அடித்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ரோமன் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேற, ஷர்துல் தாகூர் களமிறங்கினார்.
அதிரடியாக ஆடிய அவர், 22 ரன்களில் வெளியேற, பின்னர் களமிறங்கிய அக்ஸர் படேல் சிறப்பாக ஆடி, அணியில் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தார். அதிரடியாக ஆட்டொடடஙகிய அவர், 17 பந்துகளில் 38 ரன்கள் குவித்து டெல்லி அணியை வெற்றிபெற வைத்துள்ளார். டெல்லி அணி, 18.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.