#IPL2020: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இன்று நடைபெறும் 55 -வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதவுள்ளது. இந்த போட்டி, அபுதாபி மைதானத்தில் நடைபெறுகிறது .இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர்கள் விவரம் :
பிரிதிவி ஷா , ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), டேனியல் சம்ஸ் , மார்கஸ் ஸ்டாய்னிஸ், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, பிரவீன் துபே ஆகியோர் இடப்பெற்றுள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள்:
படிக்கல், ஜோஷ் பிலிப், விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), சபாஷ் அகமது , சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், இசுறு உடனா , முகமது சிராஜ், சாஹல் ஆகியோர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.