துரத்திய குஜராத் டைட்டன்ஸ்;டெல்லி கேபிடல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

Published by
Dinasuvadu Web

டெல்லி கேபிடல்ஸ் அணி  5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குஜராத் டைட்டன்ஸ் யை வீழ்த்தியது.

ஐபிஎல் தொடரின் இன்றைய 44 வது  போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

டெல்லி கேபிடல்ஸ்:

இதனைத்தொடர்ந்து, டெல்லி அணியில் முதலில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய, பிலிப் சால்ட்  டக் அவுட்டாக  மற்றும் டேவிட் வார்னர் 2 ரன்கள் மட்டும் எடுத்து வந்தவேகத்தில் களத்தை விட்டு  வெளியேறினர். அதன்பின், களமிறங்கிய அக்சர் படேல் மற்றும் ஹக்கீம் கான் பொறுப்பாக  விளையாடிய நிலையில், ஹக்கீம் கான் அரைசதம் விளாசினார். இறுதியில், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள்எடுத்தது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக ஹக்கீம் கான் 51 ரன்களும், அக்சர் படேல் 27 ரன்களும், ரிபால் படேல் 23 ரன்களும் எடுத்தனர்.குஜராத் அணியில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், மோஹித் ஷர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

குஜராத் டைட்டன்ஸ்:

131 என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விருத்திமான் சாஹா டக் அவுட் ஆக ஷுப்மான் கில் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா நிதானமான பொறுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Gujarat Titans vs Delhi Capitals [Image Source Twitter: @gujarat_titans]
விஜய் சங்கர்(6), டேவிட் மில்லர்(0) என அடுத்தடுத்து ஆட்டமிழக்க  அபினவ் மனோகர் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்து வீழ்ந்த அணியை மீட்டெடுக்க தனது பங்கிற்கு 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.டெல்லி அணியின் அபாரமான தடுப்பு பந்துவீச்சால் குஜராத் டைட்டன்ஸ் அணி  தோல்வியை தழுவியது.

 

த்ரில் வெற்றி :

குஜராத் அணி வெற்றிபெற்றுவிடுமோ என்று இருந்தநிலையில் இஷாந்த் சர்மாவின் அனுபவ பந்துவீச்சால் டெல்லி அணி கடைசி ஓவரில் 6 ரன்கள் மெட்டியும் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தி டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Gujarat Titans vs Delhi Capitals [Image Source Twitter@DelhiCapitals
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில்  கடைசி இடத்தில் இருந்த நிலையில் சற்று அதன் ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.டெல்லி அணியில் கலீல் அகமது மற்றும் இஷாந்த் சர்மா தலா  2 விக்கெட்களையும் , அன்ரிச் நார்ட்ஜே, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டார்.ஷமி  4 ஓவர்களில் 11 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
அடுத்த போட்டி (3.5.2023 புதன்கிழமை )
அடுத்த 45 வது  போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.இப்போட்டி மதியம் 3 மணி அளவில் லக்னோவில் நடைபெறுகிறது.
இரவு 7 மணிக்கு நடக்கும் 46 வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.இப்போட்டியானது மொஹாலி பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது.
Published by
Dinasuvadu Web

Recent Posts

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…

48 minutes ago

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

2 hours ago

அதிமுக – பாஜக கூட்டணி : “இனி யாரும் பேசாதீங்க..,” கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட இபிஎஸ்?

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…

3 hours ago

“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!” நயினார் நாகேந்திரன் பேச்சு!

"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…

3 hours ago

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

11 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

13 hours ago