துரத்திய குஜராத் டைட்டன்ஸ்;டெல்லி கேபிடல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

டெல்லி கேபிடல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குஜராத் டைட்டன்ஸ் யை வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரின் இன்றைய 44 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
டெல்லி கேபிடல்ஸ்:
இதனைத்தொடர்ந்து, டெல்லி அணியில் முதலில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய, பிலிப் சால்ட் டக் அவுட்டாக மற்றும் டேவிட் வார்னர் 2 ரன்கள் மட்டும் எடுத்து வந்தவேகத்தில் களத்தை விட்டு வெளியேறினர். அதன்பின், களமிறங்கிய அக்சர் படேல் மற்றும் ஹக்கீம் கான் பொறுப்பாக விளையாடிய நிலையில், ஹக்கீம் கான் அரைசதம் விளாசினார். இறுதியில், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள்எடுத்தது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக ஹக்கீம் கான் 51 ரன்களும், அக்சர் படேல் 27 ரன்களும், ரிபால் படேல் 23 ரன்களும் எடுத்தனர்.குஜராத் அணியில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், மோஹித் ஷர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
குஜராத் டைட்டன்ஸ்:
131 என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விருத்திமான் சாஹா டக் அவுட் ஆக ஷுப்மான் கில் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா நிதானமான பொறுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

த்ரில் வெற்றி :
குஜராத் அணி வெற்றிபெற்றுவிடுமோ என்று இருந்தநிலையில் இஷாந்த் சர்மாவின் அனுபவ பந்துவீச்சால் டெல்லி அணி கடைசி ஓவரில் 6 ரன்கள் மெட்டியும் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தி டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
