IPL 2024: சர்ஃபராஸ் கான் மற்றும் மணீஷ் பாண்டேவை விடுவிக்க டெல்லி கேபிடல்ஸ் முடிவு.!

SarfarazKhan - ManishPandey

IPL 2024: 17 ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதால், இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி, துபாயில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக 10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவார்கள்.

இந்த பட்டியலை சமர்பிப்பதற்கு நவம்பர் 26ம் தேதி வரை அவகாசம் உள்ளதாகவும், அதற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஐபிஎல் அமைப்புத் தெரிவித்துள்ளது. ஆனால் மினி ஏலத்திற்கு முன் டிரேடிங் முறை மூலம் வீரர்களை விற்றுக்கொள்ளலாம். இதனால் ஐபிஎல் அணிகள் தங்கள் வீரர்களை விற்றும், வாங்கியும் வருகின்றனர்.

2 உலகக்கோப்பைகளை தட்டிசெல்ல காரணமான வெ.இண்டீஸ் வீரருக்கு அதிரடி தடை..!

தற்போது ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த தேவ்தத் படிக்கலை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளது. அதேபோல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக  விளையாடி வந்த நட்சத்திர வீரரான ஆவேஷ் கானை ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது. இப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் தங்கள் அணியில் இருந்து சில வீரர்களை விடுவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் சர்பராஸ் கான் மற்றும் மணீஷ் பாண்டேவை விடுவிக்க தயாராக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சீசனில், அவர் நான்கு ஆட்டங்களில் 13.25 சராசரியுடன் 53 ரன்கள் மட்டுமே எடுத்தார். மனிஷ் பாண்டே 10 ஆட்டங்களில் 17.78 சராசரியில் 160 ரன்கள் எடுத்தார்.

ஏமாற்றமாக இருந்தாலும் பெருமைப்படுகிறோம்.! உலக கோப்பைத் தோல்வி குறித்து சூர்யகுமார்.!

ஐபிஎல்லில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற மனிஷ் பாண்டே, தனது ஐபிஎல் வாழ்க்கையில் 170 போட்டிகளில் விளையாடி 3,808 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மனிஷ் பாண்டேவை வர்த்தகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்