CSK vs DC : பந்துவீச்சில் கட்டுப்படுத்திய சென்னை., நிலைத்து ஆடிய டெல்லி! 184 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் சென்னை அணியில் ராகுல் திரிபாதி, ஓவர்டனுக்கு பதிலாக டெவோன் கான்வே, முகேஷ் சவுத்ரி ஆகியோர் களமிறங்கி உள்ளனர். காயத்தில் இருந்து கேப்டன் ருதுராஜ் மீண்டு வந்துள்ளதால் இந்த போட்டியை அவரே வழிநடத்தி வருகிறார்.
முதலில் பேட் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் ரன் எதுவும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே கலீல் அகமது பந்தில் அவுட் ஆகினார். அபிஷேக் போரல் 33 ரன்களிலும், கேப்டன் அக்சர் படேல் 21 ரன்னிலும் அவுட் ஆகினர். சமீர் ரிஸ் 20 ரன்னில் வெளியேறினார்.
தொடக்க வீரர் கே.எல்.ராகுல் ஆரம்பம் முதல் 20 ஓவர்கள் நிலைத்து ஆடி 51 பந்துகளில் 77 ரன்கள் அடித்து இறுதி ஓவரில் பத்திரனா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் நின்றார். 20 ஓவர் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் கலீல் அகமது 2 விக்கெட் 2 விக்கெட்டுகளையும் , ரவீந்திர ஜடேஜா நூர் அகமது, பத்திரனா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.