மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 110 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.
இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 51-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகின்றது . இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து டெல்லி அணியின் தொடக்க வீரரர்களான பிரிதிவி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினார்கள் .ஆனால் தவான் டக் அவுட்டாகி வெளியேறினார்.இவரைத்தொடர்ந்து பிரிதிவி ஷா 10 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்பு களமிறங்கிய ஸ்ரேயாஸ் 25 ரன்கள் , பண்ட் 21 ரன்கள், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 2 ரன்கள், ஹெட்மியர் 11 ரன்கள்,ஹர்ஷல் படேல் 5 ரன்கள், அஸ்வின் 12 ரன்கள்,ரபாடா 12 ரன்கள் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
டெல்லி அணி வீரர்கள் பெரிய ரன்களை அடிக்காமல் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் அடித்தது.மும்பை அணியின் பந்துவீச்சில் போல்ட் ,பும்ரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இதன் பின் 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கவுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…