GTvDC [file image]
ஐபிஎல் 2024: டெல்லி அணி 8.5 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களம் இறங்கிய குஜராத் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் 17.3 ஓவரில் வெறும் 89 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறி கொடுத்தனர். குஜராத் அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் மட்டும் நிதானமாக விளையாடி 31 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியில் முகேஷ் குமார் 3 விக்கெட்டையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டையும், அக்சர் படேல், கலீல் அகமது தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் டெல்லியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஜேக் மெக்குர்க் இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடங்கியதும் ஜேக் மெக்குர்க் அதிரடியாக விளையாடினார். அதன்படி 10 பந்தில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டர் விளாசி 20 ரன்கள் எடுத்து 2-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான பிருத்வி ஷா நிதானமாக விளையாடி வெறும் 7 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார். அடுத்து களமிறங்கிய அபிஷேக் போரல், ஷாய் ஹோப் இருவரும் 5-வது ஓவரில் முதல் 3 பந்தில் 1 பவுண்டரியும், அடுத்த 2- பந்தில் 2 சிக்ஸர் விளாசினார். 5-வது பந்தை எதிர்கொண்ட அபிஷேக் போரல் சிக்ஸர் விளாச அடுத்த பந்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
5-வது ஓவரில் மட்டும் 23 ரன்கள் குவிக்கப்பட்டது. பவர் பிளேவின் கடைசி ஓவரான 6-வது ஓவரில் ஷாய் ஹோப் 19 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். இதனால் டெல்லி அணி 67 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்தனர். இருப்பினும் நிதானமாக விளையாடி தங்களது இலக்கை டெல்லி எட்டியது. அதன்படி டெல்லி அணி 8.5 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி அணி இதுவரை 7 போட்டிகள் விளையாடி 3 போட்டியில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் குஜராத் அணி 7 போட்டிகள் விளையாடி 3 போட்டியில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.
மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா…
சென்னை : விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…
சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…