IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியு,ம் டெல்லி அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் 4விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக அக்சர் படேல் 66 ரன்களும், கேப்டன் ரிஷப் பந்த் 88* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அதே நேரத்தில் கடைசியில் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 7 பந்தில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி என மொத்தம் 26* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். டெல்லி அணியில் சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
225 ரன்கள் இலக்குடன் குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக விருத்திமான் சஹா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் கேப்டன் சுப்மன் கில் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் கூட்டணி அமைத்த விருத்திமான் சஹா, சாய் சுதர்சன் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர்.
இதில் நிதானமாக விளையாடி வந்த விருத்திமான் சஹா 39 ரன்னில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த சாய் சுதர்சன் 65 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஓமர்சாய் 1 ரன்னிலும், ஷாருக்கான் 8 ரன்னிலும் நடையை கட்டினார்.
மத்தியில் களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி 22 பந்தில் 55 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரி, மூன்று சிக்ஸர் அடங்கும். 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சாய் கிஷோர் 6 பந்தில் 13 ரன்கள் எடுக்க இறுதியாக குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர்.
இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி இதுவரை 9 போட்டியில் விளையாடி உள்ளது. இதில் நான்கு போட்டிகளில் வெற்றியும், ஐந்து போட்டியில் தோல்வி தழுவி உள்ளது. அதே நேரத்தில் டெல்லி அணி இதுவரை 9 போட்டியில் விளையாடி 4 போட்டியில் வெற்றியும், 5 போட்டியில் தோல்வியும் தழுவி உள்ளது.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…