ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின, இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது டெல்லி அணி.
இன்று நடைபெற்ற இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, சாம் கரணின் அதிரடி ஆட்டத்தால் டெல்லிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி.தோனி மற்றும் டு பிளெசிஸ் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர்.ரெய்னா 54 ,மொயீன் 36 மற்றும் சாம் கரண் 34 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர்.ரவீந்திர ஜடேஜா 26 ராயுடு 23 ரன்களை எடுத்திருந்தனர்.
இதன் பின்பு 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி ஆரம்பம் முதலே அதிரடி காட்டி விளையாடி இருவரும் அரை சதத்தை கடந்தனர்.138 ரன் எடுத்திருந்த நிலையில் தான் முதல் விக்கெட்டாக பிருத்வி ஷா 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.அதன் பின் ஷிகர் தவான் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
18.4 ஓவரில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…