ஐபிஎல் தொடரில் 7 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச தேர்வு செய்தது.
டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, தவான் இருவரும் களமிறங்க நிதானமாக விளையாடி வந்த பிருத்வி ஷா அரைசதம் விளாசினார். பின்னர், தவான் 35 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்த சில நிமிடங்களில் பிருத்வி ஷா 64 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் எடுத்தனர். 176 ரன்கள் இலக்குடன் சென்னை அணியில் தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஷேன் வாட்சன் இறங்கினர். ஆனால் இருவரும் நிலைத்து நிற்கவில்லை சொற்ப ரன்களில் வெளியேறினர்.
பின்னர், டு பிளிஸ்சிஸ் , ருதுராஜ் கெய்க்வாட் இறங்க ருதுராஜ் வந்த வேகத்தில் 5 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, கேதார் ஜாதவ் 28 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, தொடங்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வந்த டு பிளிஸ்சிஸ் 43 ரன்னில் விக்கெட் கீப்பர் பண்ட்டிடம் கேட்சை கொடுத்தார். அடுத்து இறங்கிய தோனி 15, ஜடேஜா 12 ரன்கள் எடுத்தனர்.
இறுதியாக சென்னை அணி 20 ஓவர் 7 விக்கெட்டை இழந்து ரன்கள் எடுத்து 131 ரன்கள் எடுத்து, 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டெல்லி அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…