முதல் டி20 போட்டி.. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்ற இந்திய அணி புதிய தோற்றத்தில் இளம் வீரர்களாக தென்னாப்பிரிக்காவில் களமிறக்கி உள்ளது. யாஷவி ஜெய்ஸ்வால், ரின்கு சிங் மற்றும் ஜிதேஷ் ஷர்மா போன்றவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இந்த டி20 தொடர் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர் டி 20 ஐ கிரிக்கெட்டில் நம்பர் 1 பந்துவீச்சாளர் ஆனார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஒரு மாத கால சுற்றுப்பயணமாக இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 2024 டி20 உலகக் கோப்பை முன்னதாக இரு அணிகளுக்கும் விளையாடும் இந்த மூன்று டி20 போட்டிகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி இன்று டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  டர்பன் நகரின் சஹாரா மைதானத்தில் மழை பெய்து வருவதால் தற்போது பிட்ச் மூடி வைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்