தொடங்கி வைத்த டிகாக் – பூரன் .. முடித்து வைத்த குருனால் ..! பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு ..!
LSGvsPBKS : ஐபிஎல் தொடரின் 11-வது போட்டியாக லக்னோ அணியும், பங்கப அணியும் இன்று லக்னோவில் உள்ள பரத் ரத்னா மைதானத்தில் தற்போது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
லக்னோ அணியில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை அந்த அணி கொண்டு வந்தது அது என்னவென்றால் கே.எல்.ராகுலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் குனிந்து மிக நேரம் விளையாட முடியாது என்பதால் அந்த அணியின் கேப்டனாக நிகோலஸ் பூரன் செயல்பட்டார். இதன் மூலம் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்து விட்டு இம்பாக்ட் வீரராக வெளியேறுவர் என்று தெரிந்தது.
இதனை தொடர்ந்து தொடக்க வீரர்களாக களமிறங்குய கே.எல்.ராகுலும், டி காக்கும் பஞ்சாப் அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாடினர். இம்பாக்ட் வீரராக வெளியேற போகும் கே.எல்.ராகுல் தொடக்கத்தில் அதிரடி காட்டினார். ஆனால், லக்னோ அணிக்கு இந்த புது முயற்ச்சி கை கொடுக்கவில்லை. அவர் 9 பந்துகளில் வெறும் 15 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய தேவதூத் படிக்கல் மிகவும் மோசமாக விளையாடி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பின் களத்தில் டிகாக்கும், பூரனும் நின்று அதிரடி காட்டி மெல்ல மெல்ல ஸ்கோரை உயர்த்த தொடங்கிய போது எதிர்பாராத விதமாக டிகாக் அரை சதம் விளாசி ஆட்டமிழந்தார். அவர் 38 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தார் அதில் 5 ஃபோர்களும், 3 சிக்ஸர்களும் அடங்கும். அதன் பின் நிக்கோலஸ் பூரன் சற்று நேரம் அதிரடி காட்டி அவரும் இக்கட்டான தருணத்தில் 21 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். இறுதி கடத்தில் லக்னோ அணிக்காக களத்தில் இருந்த குருனால் பாண்டியா அதிரடி காட்டி விளையாடினர்.
இதன் மூலம் , லக்னோவ் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து. லக்னோ அணியில் அதிகபட்சமாக டிகாக் 54 ரன்களும், பூரன் 42 ரன்களும், குருனால் பாண்டியா 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தனர். பஞ்சாப் அணியில் அர்ஷதீப் சிங் 2 விக்கெட்டுகழும், சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். இதன் மூலம் 200 என்ற ஸ்கோரை எடுத்தால் வெற்றி என களமிறங்க உள்ளது பஞ்சாப் அணி.