நிச்சயமாக நான் எதிர்கொண்ட சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர்.!
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆண்டர்சன் 599 டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
நேற்று நடைபெற்ற கடைசி நாள் போட்டியில் அசார் அலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆண்டர்சன் சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், முத்தையா முரளிதரன் 800 ஷேன் வார்ன் 708 மற்றும் அனில் கும்ப்ளே 619 ஆகியோரும் உள்ளனர்.
ஆனால், இவர்கள் அனைவரும் சுழற் பந்து வீச்சாளர்கள், சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் ஆவார்.600 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் ஆண்டர்சன் உள்ளார்.
மேலும் ஆண்டர்சன் சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட் வீழ்த்தி சாதனை வாழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் ட்வீட்டர் பக்கத்தில் 600 விக்கெட்டுகளின் இந்த சிறந்த சாதனைக்கு வாழ்த்துக்கள் நிச்சயமாக நான் எதிர்கொண்ட சிறந்த பந்து வீச்சாளர்களில் நீங்கள் ஒருவர்.
Congratulations @jimmy9 for this outstanding achievement of 600 wickets. Definitely one of the best bowlers I’ve faced.
— Virat Kohli (@imVkohli) August 25, 2020