டி20I: டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது, இதில் இன்றைய 10-வது போட்டியாக ஆஸ்திரேலியா அணியும், ஓமான் அணியும் பார்படாஸ்ஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஓமான் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததது.
அதன் படி பேட்டிங் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் சிலர் ரன்ஸ் எடுக்காமல் சொதப்பவும் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டோய்னிஸ் அதிரடியால் ஸ்கோரை பலப்படுத்தியது. வார்னர் 51 பந்துக்கு 56 ரன்களும், ஸ்டோய்னிஸ் 36 பந்துக்கு 67 ரன்களும் எடுத்தனர். இதனால் 20 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஓமான் அணி ஆஸ்திரேலியா அணியின் வலுவான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 57-6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இருப்பினும் அயன் கான் மற்றும் மெஹ்ரான் கான் இருவரும் இணைந்து சற்று ஸ்கோரை உயரத்தினார்கள். ஆனாலும், இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது.
இறுதியில், 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அசுற்றலை அணியில் அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 3விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதே போல் ஓமான் அணியில் அயன் கான் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வெற்றி பெற்றதோடு, இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…