சிக்ஸர்களை பறக்கவிட்ட வெஸ்ட் இண்டீஸ்! ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி ..!

Published by
அகில் R

டி20I : இன்று காலை நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின்  கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிரித்து விளையாடியது.

இந்த ஆண்டின் எதிர்பார்ப்பு நிறைந்த கிரிக்கெட் தொடரான 20 ஓவர் உலகக்கோப்பையின் 40-தவாது மற்றும் கடைசியான லீக் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும்  செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங் ஆரம்பித்த தொடக்கம் முதலே ஆப்கானிஸ்தான் பவுலர்கள் வீசிய பந்து வீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் விக்கெட் சீக்கிரமாக விழுந்தாலும், 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரனும், சார்லஸும் அதிரடியாக விளையாடினர்.

அதில் பூரன் 53 பந்துக்கு 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், அதே போல் சார்லஸ் 27 பந்துக்கு 43 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் உச்சத்தை தொட்டது. இருவரின் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 218 ரன்கள் எடுத்தது.

அதனை தொடர்ந்து இமாலய இலக்கான 219 ரன்களை எடுக்க ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் களமிறங்கியது. தொடக்கம் முதலே மெதுவாகவும், விக்கெட்டுகளை இழந்து சறுக்கலையும் கண்ட ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவருக்குள் 63-5 என தடுமாறியது. மேலும், தொடர்ச்சியாக அடித்து விளையாட எந்த ஒரு பேட்ஸ்மேனும் இல்லாததன் காரணமாக அந்த அணி 16.2 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது வெஸ்ட் இண்டிஸ் அணி. மேலும், ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 38 ரன்கள் எடுத்திருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒபேட் மேக்காய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!

“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!

மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…

11 minutes ago
“நான் துணை முதலமைச்சரா.?” பதறிப்போன செல்வப்பெருந்தகை! 15 நாட்கள் கெடு உத்தரவு!“நான் துணை முதலமைச்சரா.?” பதறிப்போன செல்வப்பெருந்தகை! 15 நாட்கள் கெடு உத்தரவு!

“நான் துணை முதலமைச்சரா.?” பதறிப்போன செல்வப்பெருந்தகை! 15 நாட்கள் கெடு உத்தரவு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…

48 minutes ago
“டிரம்ப் உடன் கூட்டணி வைக்க போகிறேன்..,” சீமான் தடாலடி அறிவிப்பு!“டிரம்ப் உடன் கூட்டணி வைக்க போகிறேன்..,” சீமான் தடாலடி அறிவிப்பு!

“டிரம்ப் உடன் கூட்டணி வைக்க போகிறேன்..,” சீமான் தடாலடி அறிவிப்பு!

சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…

2 hours ago

மு.க.ஸ்டாலின் vs அதிமுக! அதிமுகவை அடகு வைத்துவிட்டார்கள்.., தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்…

சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…

2 hours ago

“நான் தான் இங்க கேப்டன்..,” மேக்ஸ்வல் செயலால் நடுவரிடம் டென்ஷன் ஆன ஷ்ரேயஸ் ஐயர்!

ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

3 hours ago

Live : அண்ணாமலையின் டெல்லி பயணம் முதல்., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…

4 hours ago