சிக்ஸர்களை பறக்கவிட்ட வெஸ்ட் இண்டீஸ்! ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி ..!
டி20I : இன்று காலை நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிரித்து விளையாடியது.
இந்த ஆண்டின் எதிர்பார்ப்பு நிறைந்த கிரிக்கெட் தொடரான 20 ஓவர் உலகக்கோப்பையின் 40-தவாது மற்றும் கடைசியான லீக் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங் ஆரம்பித்த தொடக்கம் முதலே ஆப்கானிஸ்தான் பவுலர்கள் வீசிய பந்து வீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் விக்கெட் சீக்கிரமாக விழுந்தாலும், 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரனும், சார்லஸும் அதிரடியாக விளையாடினர்.
அதில் பூரன் 53 பந்துக்கு 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், அதே போல் சார்லஸ் 27 பந்துக்கு 43 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் உச்சத்தை தொட்டது. இருவரின் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 218 ரன்கள் எடுத்தது.
அதனை தொடர்ந்து இமாலய இலக்கான 219 ரன்களை எடுக்க ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் களமிறங்கியது. தொடக்கம் முதலே மெதுவாகவும், விக்கெட்டுகளை இழந்து சறுக்கலையும் கண்ட ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவருக்குள் 63-5 என தடுமாறியது. மேலும், தொடர்ச்சியாக அடித்து விளையாட எந்த ஒரு பேட்ஸ்மேனும் இல்லாததன் காரணமாக அந்த அணி 16.2 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால், 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது வெஸ்ட் இண்டிஸ் அணி. மேலும், ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 38 ரன்கள் எடுத்திருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒபேட் மேக்காய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.