சிஎஸ்கே-வை முதுகில் குத்திய தீபக் சஹார்… கேலி செய்த தங்கை.! வைரல் பதிவு…

நேற்றைய ஆட்டத்தில் 15 பந்துகளில் 28 ரன்கள் அடித்த சாஹர், முதல் ஓவரிலேயே ராகுல் திரிபாதியின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

Deepak Chahar - CSK - MI

சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. போட்டியின் போது தோனியின் அதிவேக ஸ்டம்பிங், தோனி என்ட்ரி என ரசிகர்களை ஆரவாரப்படுத்திய பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்தன. அதிலும் குறிப்பாக, வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது போல என்கிற பழமொழிக்கு ஏற்ப, சிஎஸ்கவுக்கு எதிராக மும்பை அணி  வீரர் தீபக் சஹார் பேட்டிங்கில் பொளந்து கட்டினார்.

சிஎஸ்கே வெற்றி பெற்ற பின், மும்பை அணி வீரர்களுக்கு தோனி கை கொடுத்து கொண்டிருந்த போது, தீபக் சஹார் தோனியை கண்டுக்கமாக சென்றார். அப்போது, நீ வேறு அணிக்கு போனாலும் என்னுடைய வளர்ப்புதான் என்பது போல, தீபக் சஹாரை பேட்டால் செல்லமாக  பின்னால் அடித்து கிண்டல் செய்தார்.

இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தீபக் சாஹரின் சகோதரி மால்டி, தனது சகோதரன் மும்பை அணிக்கு மாறியதை நகைச்சுவையாக ட்ரோல் செய்து, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு வேடிக்கையான மீம் மூலம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதாவது, சிஎஸ்கேவுக்கு 7 ஆண்டுகள் விளையாடிய தீபக் சாஹர் நடப்பு சீசனில் மும்பை அணிக்கு விளையாடி வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் 15 பந்துகளில் 28 ரன்கள் அடித்த சாஹர், முதல் ஓவரிலேயே ராகுல் திரிபாதியின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இந்நிலையில், பாகுபலி படத்தில், கட்டப்பா பாகுபலியை முதுகில் குத்தும் காட்சியின் புகைப்படத்தை, இன்ஸ்டாவில் போட்டு சாஹரை அவரது தங்கை கிண்டல் செய்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் சிலர் இதனை காமெடியாக பார்த்தாலும், சிலர் இதனை சீரியஸாக பார்த்து எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by NAUGHTYWORLD (@naughtyworld)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
Today Live - 25032024
US President Donald Trump
manoj bharathiraja and bharathiraja
ADMK Leaders meeti Amit shah - Edappadi Palanisamy says
shreyas iyer Shashank Singh
MKStalin
Shreyas Iyer