விவோ ஸ்பான்சர்ஷிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு .! .பிசிசிஐ!

Published by
murugan

சமீபத்தில் இந்திய, சீன எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, சமூக வலைதளங்களில் சீன பொருள்களை தடைசெய்ய வேண்டும் குரல் ஒங்க தொடங்கியது. இதனால், பாதுகாப்பு கருதி டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சீனாவை தளமாகக் கொண்ட விவோ ஐபிஎல் தலைப்பு ஸ்பான்சர்ஷிப்பை கடந்த 2018 ஆம் ஆண்டில் ரூ .2,199 கோடிக்கு ஐந்தாண்டு ஒப்பந்தம் செய்தது. 13-வது ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஐபிஎல் போட்டியில் பிசிசிஐ விவோ ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்தி வைக்குமா..?அல்லது தொடருமா..? என்ற கேள்வி எழுந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் நிர்வாக கூட்டத்தில் இதுகுறித்து பிசிசிஐ எதுவும் கூறவில்லை.

இந்நிலையில்,  விவோ ஸ்பான்சர்ஷிப்பை தற்காலிகமாக பிசிசிஐ நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது என ஐ.பி.எல் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தெரிவிக்கவில்லை.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) இந்தியாவுக்கு வெளியே நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு 2009 ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. அதே போல 2014 ஆண்டு  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இரண்டு முறையும் மக்களவைத் தேர்தல் காரணமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Published by
murugan
Tags: BCCIIPLVivo

Recent Posts

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

5 mins ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

41 mins ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

51 mins ago

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

2 hours ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

2 hours ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

3 hours ago