விவோ உட்பட அனைத்து ஸ்பான்சர்களையும் தக்க வைக்க முடிவு.!

கடந்த ஜூன் மாதம் இந்திய எல்லைப்பகுதியான லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது, இந்த மோதலின் தொடர்ச்சியாக சீன பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று குரல்கள் எழும்பின, மேலும் இதன் காரணமாக சீனாவிற்கு சொந்தமான 59 சீன ஆப்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
மேலும் சீன நிறுவனங்களை புறக்கணிக்க ஐபிஎல் போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் விவோ நிறுவனத்தை பிசிசிஐ நீக்க வேண்டும் என்று பலர் தங்களது கருத்துக்களை கூறிவந்தனர், மேலும் இதற்கு விளக்கம் அளித்த பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் அவர்கள் ஒப்பந்த காலம் முடியும் வரை ஐபிஎல் ஸ்பான்சராக விவோ மட்டுமே நீடிக்கும் என்று கூறியிருந்தார். மேலும் கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்ய ஆலோசனைக் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளோம் என பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐபிஎல் நிர்வாகக் கூட்டத்தில் ஐபிஎல் நிர்வாகம் சீனாவின் தொலைபேசி நிறுவனமான விவோ உட்பட அனைத்து ஸ்பான்சர்களையும் தக்க வைக்க முடிவு செய்துள்ளது.
மேலும் இந்நிலையில் இது குறித்து ஐபிஎல் நிர்வாகி ஒருவர் பிடிஐ நிறுவனத்திடம் கூறியது அனைத்து ஸ்பான்ஸர்களும் எங்களுடன் இருக்கிறார்கள் என்பதுதான் சொல்ல முடியும் என்று கூறியுள்ளார்.