டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் தல தோனி…யாரும் சீக்கிரம் நெருங்கமுடியாத சாதனை.!
ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி கேப்டன் தோனி, டெத் ஓவர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெத் ஓவர்களில் மஹேந்திர சிங் தோனியைப் போல எந்த வீரரும் ஆதிக்கம் செலுத்தவில்லை என்றே கூறலாம், அந்த அளவிற்கு தோனி கடைசி ஓவர்களில் பவுலர்களை கதிகலங்க வைத்துள்ளார். இறுதி ஓவர்களில்(16-20) தோனி விளையாடுகிறார் என்றால், எவ்வளவு ரன்கள் இலக்காக இருந்தாலும் பவுலர்கள் தான் அதிக அழுத்தமாக இருப்பார்கள்.
தோனி எந்த அழுத்தமும் எடுத்துக்கொள்ளாமல் எளிதாக சிக்ஸர் அடித்து விட்டு சென்றுவிடுவார். இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தோனி, 16 முதல் 20 ஓவர்களில் விளையாடும் போது ஒட்டுமொத்தமாக 162 சிக்ஸர்கள் அடித்துள்ளார். வேறு எந்த வீரரும் தோனி போல பவுலர்களை டெத் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தியதில்லை.
தோனிக்கு அடுத்தபடியாக டெத் ஓவர்களில் பொல்லார்டு 127 சிக்ஸர்களும், டிவில்லியர்ஸ் 112 சிக்ஸர்களும், ரஸல் 87 சிக்ஸர்களும், ரோஹித் 78 சிக்ஸர்களும் அடித்துள்ளனர். தோனிக்கும் 2-வது இடத்திலிருக்கும் பொல்லார்டுக்கும் 35 சிக்ஸர்கள் வித்தியாசம் இருக்கிறது. அந்த அளவிற்கு தோனியின் டெத் ஓவர் சாதனையை யாரும் சீக்கிரம் நெருங்கமுடியாத தூரத்தில் தல தோனி இருக்கிறார்.