முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் – விராட் கோலி ட்வீட்

முப்படை தளபதி பிபின் ராவத் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி ட்வீட்
ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர்.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய விமான படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இவரது மறைவுக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவர்கள், பிபின் ராவத் மரணம் குறித்து ட்விட்டர் பக்கத்தில், ‘ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் ஜி மற்றும் பிற அதிகாரிகளின் அகால மரணத்தால் ஆழ்ந்த வருத்தம். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
Deeply saddened by the untimely demise of CDS Bipin Rawat ji and other officials in a tragic helicopter crash. My deepest condolences to the friends & family members. ????
— Virat Kohli (@imVkohli) December 8, 2021