ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன்’ என்று கிரிக்கெட் ரசிகர்களால் புகழப்பட்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஜாக் எட்வர்ட்ஸ் காலமானார். நியூசிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஜாக் எட்வர்ட்ஸ் அவர்களின் தற்போது வயது 64. அவர், நியூசிலாந்து அணிக்காக 1976-81 ஆண்டுகளில் களம் கண்டு விளையாடி இருக்கிறார். இவர், சர்வதேச அளவில் மொத்தம் 8 டெஸ்ட் போட்டிகளிலும் , 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்சமாக 55 ரன், முதல் தர போட்டிகளில் அதிகபட்சமாக 177 ரன் வரை குவித்துள்ளார். முதல்தர மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ரன் எடுத்துள்ளார். விக்கெட் கீப்பராக இருந்தாலும் இவர் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் ஒரு ஓவர் மட்டும் பந்து வீசி ஒரு விக்கெட்டையும் மட்டும் கைப்பற்றி உள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் மிகவும் அவதிப்பட்டு வந்தார், இந்நிலையில், இவர் திங்கட்கிழமை இரவு காலமானார். இவரது மறைவுக்கு உலக கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…