நியூஸிலாந்திற்கு எதிரான டி சில்வா சதம்..! முதல் இன்னிங்சில் இலங்கை 244 ரன் ..!
நியூஸிலாந்து அணி, இலங்கைக்கு சுற்று பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆட்டம் தொடக்கத்திலே ஏஞ்சலோ மேத்யூஸ் 2 , குசல் பெரேரா ரன் எடுக்காமல் வெளியேறினர். முதல் நாள் போட்டி மழை காரணமாக 36.3 ஒவருடன் போட்டி முடிக்கப்பட்டது. அப்போது இலங்கை 2 விக்கெட்டை இழந்து 85 ரன்கள் எடுத்து இருந்தது.
பின்னர் நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை சிறப்பாக விளையாடிய வந்த தொடக்க வீரர் கருணாரத்ன 65 ரன்னுடன் அவுட் ஆனார். பின்னர் கவலை கிடமாக இருந்த அணியில் டி சில்வா களமிறங்கி அணியை மீட்டு கொண்டு வந்தார்.இலங்கை அணி 6 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்து விளையாடி கொண்டு இருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று 3-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணியில் நிதானமாக விளையாடிய டி சில்வா சதம் விளாசினார்.இறுதியாக இலங்கை அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது.நியூஸிலாந்து அணி சார்பில் டிம் சவுதி 4 ,
ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.