DC VS KKR: டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது!
- டெல்லி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச தீர்மானித்துள்ளது
டெல்லி மற்றும் கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி இன்னும் சில நிமிடங்களில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் துவங்க உள்ளது. கொல்கத்தா அணி இதற்கு முன்னர் தான் பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றுமொரு தோல்வியுடன் இரண்டு புள்ளிகளுடன் உள்ளது. டெல்லி அணியில் பல நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் அந்த அணியின் பந்துவீச்சு கவலைக்கிடமாகவே உள்ளது.
கொல்கத்தா அணியை பொறுத்தவரை இரண்டு போட்டியிலும் ஆல்ரவுண்டர் ரஸல் அடித்து விளையாடி அந்த அணி வெற்றி பெற வைத்துள்ளார்.
தில்லி லெவன்: ப்ரித்வி ஷா, ஷிகார் தவான், ஷ்ரியாஸ் ஐயர் (சி), ரிஷாப் பன்ட் (விக்கெட்), கொலின் இன்ராம், ஹனுமா விகார், கிறிஸ் மோரிஸ், அமித் மிஸ்ரா, சந்தீப் லேமிச்சேன், கிகிஸோ ரபாடா, ஹர்ஷல் படேல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : கிறிஸ் லின், நிதீஷ் ராணா, ராபின் உத்தப்பா, நிகில் நாயக், தினேஷ் கார்த்திக், சப்மன் கில், ஆண்ட்ரே ரஸல், பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், லாக்ஸி பெர்குசன், பிரசித் கிருஷ்ணா