யூபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் 5-வது போட்டியில் யூபி வாரியர்ஸ் அணி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற யூபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி தனது அபார பேட்டிங் திறமையால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்தது.
212 ரன்கள் என்ற இலக்கில் யூபி வாரியர்ஸ் அணியின் அலிசா ஹீலி மற்றும் ஸ்வேதா செஹ்ராவத் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 24 ரன்கள் அடித்த நிலையில் அலிசா ஹீலி, ராதா யாதவ்வின் கேட்ச் ஆட்டமிழந்தார். இதையடுத்து தஹ்லியா மெக்ராத் இறுதிவரை நின்று அணியை முன்னோக்கி நகர்த்த முயற்சி செய்தார். இருந்தும் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை அடித்த யூபி வாரியர்ஸ் அணி, இலக்கை அடையமுடியாமல் தோல்வியடைந்தது.
டெல்லி கேபிடல்ஸ் 42 ரன்கள் வித்தியாசத்தில் யூபி வாரியர்ஸ் அணியை வெற்றி பெற்றது. யூபி வாரியர்ஸ் அணியில் அதிகபட்சமாக தஹ்லியா மெக்ராத் 90 ரன்களும், அலிசா ஹீலி 24 ரன்களும், தேவிகா வைத்யா 23 ரன்களும் குவித்துள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஜெஸ் ஜோனாசென் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஜெஸ் ஜோனாசென் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…