ஐபிஎல் தொடரின் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 14-வது சீசனின் 50வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாம் இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, மொயீன் அலியும் வந்த உடனே அவுட்டானார். இதைத் தொடர்ந்து இன்று ரெய்னாவுக்கு பதில் அணியில் இடம்பெற்ற ராபின் உத்தப்பா 19 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார்.
இவர்களை தொடர்ந்து வந்த கேப்டன் தோனி மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் சற்று நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். பின்னர் தோனி 18 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்துள்ளது. இறுதி வரை களத்தில் இருந்த அம்பதி ராயுடு அதிகபட்சமாக 43 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.
டெல்லி அணி பொறுத்தளவில் சிறப்பாக பந்துவீசிய அக்சர் படேல் 2, அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். இந்த நிலையில் சென்னையை 136 ரன்களில் சுருட்டிய டெல்லி 137 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…
வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…