SRHvsDC qualifier 2: டாஸ் வென்ற டெல்லி.. ரஷீத் கானின் பந்துவீச்சை சமாளிக்குமா??
இரண்டாம் குவாலிபையரில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் இரண்டாம் குவாலிபையர் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இன்று மாலை அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற அணியில் கேப்டன் தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டி, இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பாக அமைவதால், அதனை கருத்தில் கொண்டு இரு அணிகளும் அபாரமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாடும் வீரர்கள் விபரம்:
டெல்லி கேபிட்டல்ஸ்:
ஷிகர் தவான், அஜிங்க்ய ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மியர், மார்கஸ் ஸ்டோனிஸ், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், பிரவீன் துபே, ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ச்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டேவிட் வார்னர் (கேப்டன்), ஸ்ரீவத் கோஸ்வாமி (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத், ரஷீத் கான், ஷாபாஸ் நதீம், சந்தீப் சர்மா, டி நடராஜன்.