ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 58-வது போட்டியில் டெல்லி அணி, 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 58-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீகர் பரத் – டேவிட் வார்னர் களமிறங்கினார்கள்.
இதில் 2 ரன்கள் மட்டுமே அடித்து பரத் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து மிட்சேல் மார்ஷ் களமிறங்கினார். இவருடன் டேவிட் வார்னர் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள். இந்த கூட்டணி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. இதில் அதிரடியாக ஆடிவந்த மார்ஷ் 62 பந்துகளுக்கு 89 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த், 13 ரன்கள் அடித்து போட்டியை முடித்தார். இறுதியாக 18.1 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி, 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…