ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 3 விக்கெட்களை இழந்து 207 ரன்கள் எடுத்தது. 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – கேன் வில்லியம்சன் களமிறங்கினார்கள்.
இதில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து ராகுல் திரிபாதி களமிறங்கினார். மறுமுனையில் இருந்த கேன் வில்லியம்சன் 4 ரன்கள் எடுத்து வெளியேற, சிறப்பாக ஆடிவந்த ராகுல் திரிபாதி 22 ரன்கள் அடித்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஐடென் மார்க்கம் – நிகோலஸ் பூரண் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கொரை உயர்த்தினார்கள்.
இதில் 42 ரன்கள் எடுத்து ஐடென் மார்க்கம் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…